மன்னாரில் மூன்று பாடசாலைகளுக்கு முன்பாக பயணிகள் தரிப்பிடம் அமைக்கும் பணி ஆரம்பம்
மன்னாரில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கு முன்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி பயணிகள் தறிப்பிடங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் நகரசபைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (11) விஜயம் செய்த வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் ஆகியோர் நகரசபையின் செயலாளர் பிரதி நகர முதல்வர் மற்றும் தொழில் நுட்ப உதவியாளர் ஆகியோருடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.
சந்திப்பின் போது மன்னார் நகரப்பகுதியில் உள்ள புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி, புனித சவேரியார் பெண்கள் கல்லூரி, சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு முன்பாக பேரூந்தில் வருகின்ற பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெயில் மற்றும் மழை காலங்களில் எதிர் நோக்குகின்ற அசௌகரியங்களை கருத்திற்கொண்டு பயணிகள் தரிப்பிடங்களை அமைப்பதற்கான திட்டத்தினை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ள இடங்களை அமைச்சருடனான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இத்திட்டத்தினூடாக பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் நன்மையடையவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மன்னார் தனியார் பேரூந்து நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினரை சந்தித்த அமைச்சருடனான குழுவினர் மன்னார் தனியார் பேரூந்து நிலையத்தை புனரமைப்பது தொடர்பாக கலந்த்துரையாடினர்.
கலந்துரையாடலின் முடிவில் பேரூந்து நிலையம் வெகு விரைவில் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்ததோடு தனியார் பேரூந்து நிலையத்தை பார்வையிட்டனர்.
மன்னாரில் மூன்று பாடசாலைகளுக்கு முன்பாக பயணிகள் தரிப்பிடம் அமைக்கும் பணி ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
April 12, 2014
Rating:

No comments:
Post a Comment