அஞ்சான் படத்தை ரூ 10க்கு தான் பார்ப்போம்!
தமிழ் திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அஞ்சான். இப்படத்தின் இசை சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் சூர்யா மற்றும் தயாரிப்பாளர்கள் ரசிகர்களை பார்த்து ‘உங்கள் காலில் விழுந்து கேட்கிறோம், படத்தை திருட்டு விசிடியில் பார்க்காதீர்கள், தியேட்டருக்கு வந்து பாருங்கள்’ என்று கூறினர்.உடனே கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர் ‘ நாங்கள் பார்க்கிறோம் ஆனால் 10 ரூபாய் டிக்கெட்டில் தான் பார்ப்போம்’ என்று கிண்டல் செய்தார்.
தியேட்டர் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் தான், ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதில்லை என்பதை அந்த ரசிகர் விளையாட்டாக கூறிவிட்டார்.
அஞ்சான் படத்தை ரூ 10க்கு தான் பார்ப்போம்!
Reviewed by NEWMANNAR
on
July 26, 2014
Rating:

No comments:
Post a Comment