அண்மைய செய்திகள்

recent
-

யாழில் இருந்து கொழும்பு சென்ற ஊடக வியலாளர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்- படங்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஊடகவியலாளர்களின் வாகனத்தில் நேற்று இரவு  ஓமந்தை சோதனைச்சாவடியில் இராணுவத்தினர் கஞ்சா போதைப்பொருளை வைக்க பொலிஸார் குறித்த வாகனத்தில் சென்ற ஊடகவியலாளர்களை கைது செய்துள்ளனர். 

 இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் ஒருவர் தெரிவிக்கையில்,,, 

 யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி தனியார் வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 7 ஊடகவியலாளர்கள் பயணித்த போது முதலில் யாழ் கச்சேரிக்கு முன் இரண்டு புலனாய்வுத்துரையினர் குறித்த ஊடகவியலாளர்களின் வாகனத்தை பின் தொடர்ந்துள்ளனர். அதனை வாகனத்தில் இருந்த ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர். இந்த நிலையில் புளியங்குளம் சோதனைச்சாவடியை சென்றடைந்த போது குறித்த ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு இராணுவத்தினர் மற்றும் சிவில் உடையில் நின்றவர்களினால் கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

 பின் அவர்களை செல்ல இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.பின் குறித்த ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனம் மீண்டும் ஓமந்தை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதன் போது ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனத்தை 06 இராணுவத்தினர் மற்றும் 3 பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர். இதன் போது இராணுவ வீரர் ஒருவர் 'கோர்லிப்' பெட்டி ஒன்றில் வைக்கப்பட்ட கஞ்சாவினை சாரதியின் ஆசனத்திற்கு முன் வைப்பதை ஊடகவியலாளர் ஒருவர் கண்டுள்ளார்.பின் இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து செல்ல பொலிஸார் உடனடியாக வந்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த 'கோர்லிப்' பெட்டியில் இருந்த கஞ்சாவை பொலிஸார் மீட்ட நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி உட்பட 8 பேரை ஓமந்தை பொஸார் கைது செய்துள்ளனர்.

 யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களான எஸ்.நிதர்சன்,வி.கஜீபன்,எஸ்.சொரூபன்,கே.கம்சான்,எஸ்.பாஸ்கரன்,மயூர பிரியன் மற்றும் கெனடி நியூமன் ஆகிய 7 ஊடகவியலாளர்களுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஓமந்தை பொலிஸார் குறித்த ஊடகவிலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றது. 

இது இவ்வாறிருக்க ஓமந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனத்தையும், சாரதியையும் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப் போவதாகக் கூறி காவல்துறையினர் வாகன சாரதியை விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று ஓமந்தை காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். 

எனினும் விபரங்கள் எதனையும் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் ஊடகப் பயிற்சிக்காக அண்மையில் பொலன்னறுவை பகுதிக்குச் சென்றிருந்த போதும், அதேபோன்று மற்றுமொரு ஊடகப் பயிற்சிப்பட்டறைக்காக நீர்கொழும்புக்குச் சென்றிருந்த போதும், பொலிசார் அந்தப் பயிற்சிப்பட்டறைகளை, பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த முடியாது எனக் கூறி அவற்றில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களைத் திருப்பி அனுப்பி வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 அதேநேரம், அரச சார்பற்ற நிறவனங்கள் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளையோ, கருத்தரங்குகளையோ நடத்தக் கூடாது. அது அவர்களுக்குக் குறித்தொதுக்கப்பட்ட செயற்பாடு அல்ல என்று பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது ஊடகவியலாளர்களை விடுதலை செய்ததுடன் அவர்களை காவல்துறை வளாகத்துக்கு வெளியே செல்லுமாறு பணிக்கப்பட்டு தற்போது நடு வீதியில் நிற்கின்றனர்.

இந்திலையில் வாகனத்தின் சாரதி தொடர்ந்து சிறீலங்கா காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சாரதியை விடுதலை செய்வதுடன் தொடர்ந்து தாம் பயணிக்க வேண்டும் எனக்கோரி தற்போது ஓமந்தை சிறீலங்கா காவல்துறை வளாகத்தின் முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.




யாழில் இருந்து கொழும்பு சென்ற ஊடக வியலாளர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்- படங்கள் Reviewed by NEWMANNAR on July 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.