அண்மைய செய்திகள்

recent
-

முன்னேற்றமடையும் மன்னார் கழுதைகளின் நிலை

2012ல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி மன்னார் நகரசபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 482 கழுதைளும் மன்னாரின் ஏனைய இடங்களில் சுமார் 200 கழுதைகளும் என சுமார் 682 கழுதைகள் மன்னாரில் இனங்காணப்பட்டன. கழுதைகள் பற்றி மன்னார் அரசாங்கஉத்தியோகத்தரின் சுற்றுச்சூழல் குழுவினருடனும் மன்னார் நகரசபையினருடனும் கலந்தாலோசித்தபோது இவ்விடயம் தொடர்பில் உதவுமாறு பிரிட்யிங் லங்கா (Bridging Lanka)(முன்பு டயஸ்போராலங்கா) அமைப்பிடம் கோரப்பட்டது. 

இதனையடுத்து ஜக்கியராட்சியத்தில் உள்ள கழுதைகள் சரணாலயத்தின் உதவியை நாம் நாடியபோது அவர்கள் மன்னாரில் மனநலன் குன்றியபிள்ளைகளின் நலன் கருதி மன்னார் கழுதைகளின் நலநன முன்னேற்ற முன் வந்தனர். இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் அமைந்துள்ள ஜக்கியராட்சியத்தின் கழுதைகள் சரணாலயத்தின் துணை காரியாலயங்களும் இத்திட்டத்திற்கு உதவ முன்வந்தன. இதனடிப்படையில் இந்தியாவின் கழுதைகள் சரணாலயக் குழுவானது தமது தரிசிப்பை மன்னாருக்கு மேற்கொண்டு இத்திட்டம் தொடர்பாக கலந்தாலோசித்தமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக மன்னார் நகரசபைக்குட்பட்ட கழுதைகளை படிப்படியாக ஒரு இடத்திற்கு மாற்றி சிகிச்சை மற்றும் பயிற்சி அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. 

அதற்கமைய மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 1 ஏக்கர் நிலம் பெறப்பட்டு துப்புரவாக்கும் திட்டமும்,சிகிச்சைநிலையம் அமைக்கும் பணிகளும் ஆரம்பமாகவுள்ளன. இங்கு பயிற்றுவிக்கப்படும் சில கழுதைகள் மன்னார் மாற்றாற்றல் (MARDP) நிறுவனத்தில் கல்விகற்று வருகின்ற மனநலன் குன்றிய பிள்ளைகளின் நலன் கருதி பயன்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்திற்காக கழுதைகள் மூலமான மருத்துவமையம் ஒன்று முருங்கன் கிராமத்தில் அமைந்துள்ள மன்னார் மாற்றாற்றல் நிலையத்திற்கு சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

மன்னார் கழுதைகளின் சிறப்புபற்றியும் அவைகளை கையாளும் முறைகள் பற்றியும் சில செயலமர்வுகளும்,விழிப்புணர்வு கருத்தரங்குகளும் பாடசாலைமட்டத்தில் ஏற்கனவே நடாத்தப்பட்டும் மீண்டும் நடாத்தப்படவும் உள்ளன. இந்தியாவிலிருந்து வருகைதந்த கழுதைகள் சரணாலயக் குழுவினரால் கழுதைகளை கையாளும் முறை தொடர்பான செயல்மர்வுகள் நடாத்தப்பட்டதை தொடர்ந்து மன்னார் பிரதேசத்தின் உப்புக்குளம்,சாந்திபுரம் மற்றும் ஆஸ்பத்திரி வீதி ஆகிய இடங்களில் சில குடும்பங்கள் கழுதைகளை வளர்க்கவும்,பராமரிக்கவும் தொடங்கியுள்ளன. 

இவ்வாறு பல வருடகால சிறப்பும் பாரம்பரியமும் நிறைந்த கழுதைகளின் நலன் தொடர்பாக சிந்தித்து அவற்றின் நலநன முன்னேற்றவென மன்னார் கழுதைகளின் நலன்புரிசங்கம் ஒன்று அமைக்கப்பட்டு மாதாந்த ஒன்று கூடலும் செயற்பாடுகளும் மன்னார் மாற்றாற்றல் நிறுவனத்தில் நடைபெறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

சின்கிளேயர் பீற்றர் 
 பிரிட்யிங் லங்கா
 மன்னார். 
 தொ. பே. 077-2131-652 
மின் அஞ்சல்-  petsinclair@gmail.com
முன்னேற்றமடையும் மன்னார் கழுதைகளின் நிலை Reviewed by NEWMANNAR on July 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.