போப்பாண்டவரின் இலங்கை விஜயம்; திகதிகளை உறுதிப்படுத்தியது வத்திக்கான்
போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயம் எதிர்வரும் ஜனவரி மாதம் 12 முதல் 19ஆம் திகதி வரையில் இடம்பெறும் என வத்திக்கான் அறிவித்துள்ளது.
போப்பாண்டவரின் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது அவர், பிலிப்பைன்ஸில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வத்திக்கான் வௌியிட்டுள்ள அறிக்கையில், போப்பாண்டவர் இலங்கையில் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விஜயத்தில் ஈடுபடுவார் எனவும் அதன் பின்னர் பிலிப்பைன்ஸ் நோக்கிப் பயணிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப்பாண்டவரின் இலங்கை விஜயம்; திகதிகளை உறுதிப்படுத்தியது வத்திக்கான்
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:

No comments:
Post a Comment