பல கோடி சொத்துக்களை இழந்து வீட்டை விட்டு வெளியேறினார் கார்த்திக்…!
தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90–களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக். இவர் மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் ஆவார்.முத்துராமனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் நிறைய வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
முத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் குடும்பத்துடன் வசித்தார். இதே வீட்டில் முத்துராமன் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தார்கள். முத்துராமனுக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் மகள்கள் உண்டு.
கார்த்திக் குடும்பத்தினர் இடையே சமீபத்தில் திடீர் சொத்து தகராறு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறும்படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். சொத்தில் எனக்கும் பங்கு உண்டு. நான் ஏன்? வெளியேற வேண்டும் என்று கார்த்திக் மறுத்தார். அப்போதுதான், உயில் அவரிடம் காண்பிக்கப்பட்டது.
சொத்து உயில் அவர் பெயரில் இல்லை. அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். தன்னை ஏமாற்றி விட்டதாக சண்டை போட்டார். வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறினார்.
சொத்தில் தனக்கும் பங்கு உண்டு என்றும், ஏமாற்றப்பட்டு விட்டேன் என்றும் நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டு பேசி வருகிறார் கார்த்திக். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறார்.
பல கோடி சொத்துக்களை இழந்து வீட்டை விட்டு வெளியேறினார் கார்த்திக்…!
Reviewed by NEWMANNAR
on
August 29, 2014
Rating:

No comments:
Post a Comment