எந்த ஹீரோ படத்துக்கும் இசை அமைக்க மாட்டேன்: விஜய் ஆண்டனி
இனி எந்த ஹீரோ படத்துக்கும் இசை அமைக்க மாட்டேன் என்று விஜய் ஆண்டனி கூறினார்.‘சுக்ரன்', ‘டிஷ்யூம்', ‘காதலில் விழுந்தேன்' உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்து வந்தவர் விஜய் ஆண்டனி. ‘நான் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அடுத்து ‘சலீம் படத்தில் நடித்து வருகிறார்.
இது பற்றி விஜய் ஆண்டனி கூறியதாவது:‘நான் படத்தை நடித்து முடித்தவுடன் 2வது படத்தையும் வெற்றி படமாக தர வேண்டும் என்று எண்ணி கதை தேர்வுக்காக ஒரு வருடம் வீணடித்துவிட்டேன். ‘நான்' படத்தின் தொடர்ச்சியாக அடுத்த படம் இருக்க வேண்டும் என்பதால் அப்படத்தில் ஏற்ற டாக்டர் வேடத்தை ‘சலீம்' படத்தில் ஏற்றிருக்கிறேன்.
இது ‘நான்'படத்தின் 2ம் பாகம் எனலாம். அப்படத்தில் வந்த கதாபாத்திரங்கள் கிடையாது. அக்ஷா ஹீரோயின். இனி நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதால் ‘இந்தியா-பாகிஸ்தான்‘, ‘சைத்தான்' ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறேன். ‘சலீம்‘ பேய் படமா, திரில்லர் படமா, கிரைம் சப்ஜெக்டா என்ற குழப்பம் இதன் டிரைலரை பார்த்தால் ஏற்படும்.
அதற்கு விடை படத்தில் கிடைக்கும். நடிப்பில் கவனம் செலுத்துவதால் இனிமேல் எந்த ஹீரோ படத்துக்கும் இசை அமைக்க மாட்டேன். இவ்வாறு விஜய் ஆண்டனி கூறினார்.
எந்த ஹீரோ படத்துக்கும் இசை அமைக்க மாட்டேன்: விஜய் ஆண்டனி
Reviewed by NEWMANNAR
on
August 29, 2014
Rating:

No comments:
Post a Comment