பார்வையாளர்களை மிரளவைக்கும் கண்காட்சி-Photo
சுவிசின் உயிரியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் கண்காட்சி பார்வையாளர்களை அச்சமடைய செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிசின் சூரிச் பல்கலைக்கழக்கத்தில் (University of Zurich) உள்ள உயிரியல் அருங்காட்சியகத்தில் (Zoological Museum) ஆகஸ்ட் 26ம் திகதி முதல் டிசம்பர் 14ம் திகதி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சி (University of Geneva) ஜெனிவா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலில் பார்வையாளர்களுக்கு உயிரினங்கள் குறித்த காமிக் புத்தகங்களும், கருப்பு வெள்ளை படங்களும் திரையில் காண்பிக்கப்படும்.
இதன்பின் பயத்தை தூண்டும் வகையில், நோயினால் பாதிக்கப்படும் உயிரினங்களின் முரட்டான குணாதிசியங்களும், அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றியும் விளக்கமளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் உயிரினங்களை கண்டு பதறுவதிலிருந்து விடுபடுவது எவ்வாறு? என்பது குறித்த விளக்கங்களை அங்குள்ள சிற்றேடுகள் மற்றும் புத்தங்களின் மூலம் பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
பார்வையாளர்களை மிரளவைக்கும் கண்காட்சி-Photo
Reviewed by NEWMANNAR
on
August 29, 2014
Rating:

No comments:
Post a Comment