ஒரு படம் 4 கதைகள்
ஒரே படத்தில் 4 வாழ்க்கை கதைகள் கொண்ட படமாக உருவாகிறது ‘நெருங்கி வா முத்தமிடாதே. இது பற்றி இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, பல்வேறு படங்களில் குணசித்ர நடிகையாக என்னை பார்த்தவர்கள் ஆரோகணம் படத்தில் இயக்குனராக ஏற்றுக்கொண்டார்கள்.
அடுத்து இயக்கும் படம் ‘நெருங்கி வா முத்தமிடாதே. தேசிய பெட்ரோல் தட்டுப்பாடு என்பதை மைய கருத்தாக கொண்டு இக்கதை அமைந்திருக்கிறது. ஒரு படம்தான் ஆனால் நான்கு வாழ்க்கை கதைகள் இதில் பின்னி பிணைந்திருக்கின்றன. உணர்வுகளும், உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக திரைக்கதை அமைந்துள்ளது.
ஷபீர் கலரக்கல் ஹீரோ. பியா ஹீரோயின். சுருதி ஹரிஹரன், தம்பி ராமையா, ஒய்.ஜி.மகேந்திரன், அம்பிகா, அழகப்பன், தலைவாசல் விஜய் நடித்திருக்கின்றனர். வினோத் பாரதி ஒளிப்பதிவு. மேட்லி பிளூஸ் இசை. ஏ.வீ.அனூப் தயாரிப்பு. தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால், கும்பகோணம், நெய்வேலி மற்றும் மலேசியாவில் படமாகி உள்ளது. இவ்வாறு இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.
ஒரு படம் 4 கதைகள்
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:


No comments:
Post a Comment