வில்லியாகும் காஜல் அகர்வால்
வில்லியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். கோலிவுட், டோலிவுட்டில் படங்கள் இல்லை, அதிக சம்பளம் கேட்கிறார் என்று சமீபகாலமாக காஜல் அகர்வால் பற்றி பரபரப்பான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுபற்றி வாய் திறக்காமல் இருந்தவர் தற்போது சூடாக பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது,,,,
என்னைப்பற்றி பலர் பலவிதமாக பேசுகிறார்கள். ஆனால் ரசிகர்கள் என்னை ஆதரித்து பாராட்டுகிறார்கள் என்கிறபோது அதுபோன்ற புகார்கள் என்னை ஒன்றும் செய்யாது. ஒரு படத்தை ஒப்புக்கொள்ளும்போது அதற்காக கடினமாக உழைக்கிறேன். எனக்கு தரப்படும் சம்பளம் என் தகுதிக்கு ஏற்றதுதான் என்று என்னால் கூற முடியும். தமிழ், தெலுங்கில் ஏற்கனவே நடித்த ஹீரோக்களுடனே நான் நடிக்கிறேன். அதற்கு, அவர்களுடன் நான் பொருத்தமான ஜோடியாக அமைந்ததுதான் காரணம்.
அடுத்த சுதிர் மிஸ்ரா படத்தில் நடிக்கிறேன்.
இதில் வில்லித்தனமான கதாபாத்திரம். இதுவரை இதுபோல் ஒரு கேரக்டரை நான் ஏற்று நடித்ததில்லை. நடிப்புதான் இப்போது எனது கவனம். திருமணம் பற்றி என்னுடைய மனதில் இப்போதைக்கு எந்த எண்ணமும் இல்லை. காதல் பற்றி கேட்கிறார்கள். கல்லூரி நாட்களில் ஒருவரை காதலித்தேன். ஆனால் அது இப்போதைக்கு இல்லை. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
வில்லியாகும் காஜல் அகர்வால்
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:


No comments:
Post a Comment