அமெரிக்காவில் 'மானே தேனே பேயே'
மாஜி நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தமிழில் அறிமுகமாகிறார்.‘நெற்றிக்கண் படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்தவர் மேனகா. ஏராளமான மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவரது மகள் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ‘மானே தேனே பேயே என்ற படத்தில் நடிக்கிறார்.
‘சில்லுன்னு ஒரு காதல்‘, ‘நெடுஞ்சாலை‘ படங்களை இயக்கிய கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். அவர் கூறியது:எனது இயக்கத்தில் உருவான ‘சில்லுன்னு ஒரு காதல்‘ இளமையான ரொமான்ஸ் கதை. ஹைவே சாலைகளில் செல்லும் லோடு லாரிகளிலிருந்து பொருட்களை நுணுக்கமாக திருடும் ஒரு திருடனை பற்றிய படமாக ‘நெடுஞ்சாலை உருவானது.
இந்த 2 படங்களிலிருந்து மாறுபட்ட ஸ்கிரிப்ட்டாக காதலுடன் காமெடியுடன் உருவாகிறது ‘மானே தேனே பேயே. ‘நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஆரி இப்படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். சென்னையில் ஷூட்டிங் நடப்பதுடன் அமெரிக்காவிலும் முக்கிய காட்சிகள் படமாகின்றன. சத்யா இசை அமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். கல்சன் மூவிஸ் தயாரிக்கிறது.இவ்வாறு டைரக்டர் கிருஷ்ணா கூறினார்.9 தொடர் தோல்விகளால் சிக்கல்
அமெரிக்காவில் 'மானே தேனே பேயே'
Reviewed by NEWMANNAR
on
August 29, 2014
Rating:

No comments:
Post a Comment