அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் உருவாகும் பாரதிராஜா படம்

‘அன்னக்கொடி’ ரிலீசை தொடர்ந்து பாரதிராஜா எழுதி இயக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடக்கிறது. 

இதுகுறித்து அவர் கூறியதாவது:என் லட்சியப் படமான ‘குற்றப்பரம்பரை’யை விரைவில் தொடங்கு வேன். நான் இயக்கி நடிக்கும் புதுப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடக்கிறது. இந்தியாவில் இருந்து சென்று லண்டனில் செட்டிலான வயதான ஒருவருக்கும், குழந்தைத்தனம் மாறாத இளம் பெண்ணுக்கும் இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களின் தொகுப்பாக படம் இருக்கும். இரண்டு மாதங்கள் லண்டனில் ஷூட்டிங் நடத்துகிறேன். 

வயதான வேடத்தில் நான் நடிக்கிறேன். மற்றவர்கள் தேர்வு நடக்கிறது. ‘பாண்டிய நாடு’ ரிலீசான பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஒரு படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டேன். 80களில் பரபரப்பாகப் பேசப்பட்ட பத்திரிகையாளனைப் பிரதிபலிக்கும் கேரக்டர் என்பதால், மறுபேச்சு இல்லாமல் சம்மதித்தேன். புதியவர் இயக்குகிறார்.
லண்டனில் உருவாகும் பாரதிராஜா படம் Reviewed by NEWMANNAR on August 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.