அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் விபத்தில் படுகாயம்

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் இன்று கடமையின் நிமிர்த்தம் பூநகரிக்குச் சென்றறு மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது, பத்தாம் கட்டையடியில் அவரது வாகனத்தின் முன் பக்கச் சக்கரம் திடீரெனக் காற்றுப்போய், உருண்டோடியுள்ளது. 

 இதனையடுத்து வாகனம் கவிழ்ந்ததில், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் பொதுமக்களின் உதவியுடன், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் விபத்தில் படுகாயம் Reviewed by NEWMANNAR on August 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.