இஸ்லாமிய கலாச்சார உடைகளை அணிந்து வாக்களிக்க முடியாது
ஸ்லாமிய கலாச்சார உடைகளை அணிந்து வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
அண்மையில் கட்சிகளின் செயலாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாது. தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படங்களை எடுக்கும் போதும் ஹிஜாப் அணிந்து காதுகளை மறைக்கக் கூடாது.
வாக்குச் சாவடிக்குச் செல்லும் முஸ்லிம் பெண்கள் அல்லது வேறு தரப்பினர் முகத்தை மூடிக்கொண்டு வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய கலாச்சார உடைகளை அணிந்து வாக்களிக்க முடியாது
Reviewed by NEWMANNAR
on
August 01, 2014
Rating:

No comments:
Post a Comment