அசத்திய மன்னார் அடம்பன் அணி
கடந்த சனிக்கிழமை (02.08.2014) மன்னார் உதைபந்தாட்ட லீக்கினால் அணிக்கு 7பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அடம்பன் பிரதேசத்தை பிரதி நிதித்துவப்படுத்தி பங்கு பற்றிய அடம்பன் ஐக்கிய விளையாட்டுக் கழகமானது மன்னார் அஞ்சல் திணைக்கள அணியுடனான முதலாவது போட்டியில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றில் மிகவும் பலம் வாய்ந்த மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அணியுடன் மோதியது.
இதில் அடம்பன் ஐக்கிய விளையாட்டு கழக அணியானது 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.
குறித்த அணியின் வீரர்களான சாள்ஸ், நிசோக் மற்றும் நிலாளன் ஆகியோர் தலா ஒரு கோலை போட்டு அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்துசென்றனர்.
எனவே எமது அணிவீரர்களையும் அணியின் நிர்வாகம் மற்றும் பயிற்றுவிப்பாளர் சூ. டீன்சன் அவர்களையும் எமது அடம்பன் மக்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றோம்.
அசத்திய மன்னார் அடம்பன் அணி
Reviewed by NEWMANNAR
on
August 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 04, 2014
Rating:


No comments:
Post a Comment