அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றனர்-செல்வம் எம்.பி கண்டனம்.

வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வரும நிலையில் நேற்று(2) சனிக்கிழமை இரவு வவுனியா ஊடகவியலாளரும்,வன்னி பத்திரிக்ககையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபில் நாத்திற்கு தொலைபேசியூடாக தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை ஊடகவியலாளர்களை நெருக்கடிக்குள் தள்ளி அவர்களின் பணியை முடக்க மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகவே காணப்படுவதாகவும்,குறித்த அச்சுறுத்தல் சம்பவத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

 இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,, 

 வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேற அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர் பாரிய அச்சுறுத்தலகளின் காரணமாக நாட்டை விட்டு பிரிதொரு நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து யாழ் ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனத்தில் ஓமந்தை சோதனைச்சாவடியில் படையினர் கஞ்சா போதைப்பொருளை வைத்து ஊடகவியலாளர்களை கைது செய்ய முட்பட்டுளளனர். 

தற்போது மக்களின் பிரச்சினைகளை வெளி உலகிற்கு கொண்டு வர மக்களுக்காக குரல் கொடுத்து வரும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளரான நவரத்தினம் கபில் நாத்திற்கு தொலை பேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவரது கடமையை செய்ய முடியாத வகையில் அவர் அச்சுரூத்தப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வுப்பிரினரினால் அல்லது அரச படைகளினாலேயே இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுகின்றது. யுத்த காலத்தில் கூட ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில் செய்திகளை சேகரித்து தமது பணியினை முன்னெடுத்து வந்தனர்.ஆனால் தற்போது ஊடகவியலாளர்களுக்கு எவ்வித சுதந்திரமும்,பாதுகாப்பும் இல்லை.

ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுரூத்தபடுகின்றனர். விசாரனைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்படுகின்றனர். இதனால் ஊடகவியலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.ஊடகவியலாளர்களை பாதுகாப்பதில் அரசாங்கம் தொடர்ச்சியாக தவரிழைத்து வருகின்றது.

எனவே வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபில் நாத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் தொடர்பில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு விடுக்கப்பட்டுள்ள தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாக வவுனியா பொலிஸார் ஆராய்ந்து உரிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஊடகவியலாளர்களை பாதுகாக்கக்கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபடும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாண ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றனர்-செல்வம் எம்.பி கண்டனம். Reviewed by NEWMANNAR on August 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.