வவுனியாவில் நன்னீர் மீன்களை உணவிற்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்
வவுனியா மாவட்டத்தில் குளங்களில் பிடிக்கும் மீன்களை உணவிற்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்ஷந்திர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்டத்தில் நிலவிய வரட்சியினை அடுத்து குளங்களின் நீர் வற்றியுள்ளதாகவும் இதனால் மீன்கள் உயிரிழந்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
குளங்களில் எஞ்சியுள்ள நீரில் உயிர்வாழும் மீன்களை பிடித்து உணவிற்கு பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கு பாதிப்புகள் ஏற்படக் கூடும் என மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியள்ளார்.
எனினும், குளங்களிலிருந்து மீன்கள் பிடிக்கப்பட்டு மாவட்டத்திலும் வெளி மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படுவதாகவும் பந்துல ஹரிஸ்ஷந்திர கூறினார்.
எனவே சுகாதார நிலைமைகளை கருத்திற் கொண்டு குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை உணவிற்கு எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்குமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்ஷந்திர வலியுறுத்தியுள்ளார்.
வவுனியாவில் நன்னீர் மீன்களை உணவிற்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்
Reviewed by NEWMANNAR
on
August 22, 2014
Rating:

No comments:
Post a Comment