அண்மைய செய்திகள்

recent
-

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறை வேற்றப்படுவதற்காகவே எங்களுக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்துள்ளனர்- றிப்கான் பதியுதீன்

வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு வருடங்களாகின்ற நிலையில் மக்களுக்கு வடமாகாண சபை இதுவரையில் என்ன செய்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கேல்வி எழுப்பியுள்ளார்.

வடமாகாண சபையின் அமர்வு நேற்று (21) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்குமாகாண சபையில் இடம் பெற்றது.இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

வடமாகாண சபை தேர்தலின் போது மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு பெரும்பான்மை வாக்குகளை வழங்கி ஆட்சியை கைப்பற்ற உதவி செய்துள்ளனர்.ஆனால் இன்று வரை அந்த மக்களுக்கு உரிய முறையில் எவ்வித உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

மன்னாரில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்போது உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால் கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை.

தற்போது இடம் பெற்று வரும் ஜெனிவாப்பிரேரணை  முற்றுப்பெறாத நிலையில் மேலும்,மேலும் பிரேரணைகளை முன்வைப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது என கேள்வி எழுப்பினர்.மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் இது வரை செயற்படுத்தப்படவில்லை.

 நாட்டில் இடம் பெற்ற யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் ஜனாதிபதி வடக்கில் பல அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.ஆனால் எவ்வித அபிவிருத்திப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறுவதில் என்ன நியாயம் இருக்கின்றது???


கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களில் மின்சார வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு வீதிகள் காபட் வீதிகளாகவும் ஜனாதிபதியினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.ஆட்சியில் உள்ள அமைச்சர்களான டக்லஸ் தேவானந்தா,றிஸாட் பதியூதின்,பசில் ராஜபகஸ ஆகியோரின் முயற்சியினாலே இந்த அபிவிருத்தி பணிகள் இடம் பெற்றுள்ளது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

மக்களுக்கான அடிப்படை தேவைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் போது அதற்கு முட்டுக்கட்டையாக யாரும் இருக்கக்கூடாது.

வாக்களித்த மக்களுக்கு இனியாவது உதவிகளை செய்ய நாம் முன்வர வேண்டும்.வாக்களித்த மக்களுக்கு நாம் இது வரை என்ன செய்தோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

எங்களிடம் மக்கள் எதனையும் எதிர்பார்க்காது கௌரவத்திற்காகவே வாக்களித்ததாக சிலர் கூறுகின்றனர்.ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறை வேற்றப்படுவதற்காகவே எங்களுக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்துள்ளனர் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனவாதம்,மதவாதம் எமக்கு வேண்டாம்.நாம் ஒற்றுமையுடன் செயற்படுவோம்.

எனவே வடமாகாண மக்களுக்கு நாம் சிறந்த சேவையை செய்ய நானும்,அரசாங்கமும் உங்களுடன் இணைந்து செயற்பட எந்த நேரமும் தயாராகவே உள்ளோம் என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறை வேற்றப்படுவதற்காகவே எங்களுக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்துள்ளனர்- றிப்கான் பதியுதீன் Reviewed by NEWMANNAR on August 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.