சிறப்பாக இடம் பெற்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு நேற்றைய தினம்(28) வியாழக்கிழமை மதியம் 2.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ். . சந்தியாகு (FSC) அவர்கள் தலைமையில் பாடசாலை திறந்தவெளி அரங்கில் மிகவும் பிரமாண்டமாக இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் வை .ஜெயச்சந்திரன், கெளரவ விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.செல்வன் , புனித. செபஸ்ரியார் தேவாலய பங்குத்தந்தை அருட்தந்தை
. கிறிஸ்து நாயகம் அடிகளார் , மன்னார் டிலாசால் ஆங்கில மொழிப் பாடசாலை இயக்குனர் அருட்சகோதரர் யோகநாதன் சோசை FSC ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதே நேரம் விசேட விருந்தினர்களாக வவுனியா மற்றும் களனி பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் களான தர்மதாசன் அன்ரன் புஸ்பராஜா மற்றும் நேச ரெட்ணம் எட்வின் லினோஷ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்
இவர்களுடன் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அயல் பாடசாலை அதிபர்கள் வலயக் கல்வி அதிகாரிகள் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
2024 ஆம் ஆண்டு தேசிய ரீதியாக இடம்பெற்ற பல்வேறு போட்டி நிகழ்வுகள்,விளையாட்டுக்கள் மற்றும் க.பொ.த சாதாரண தரம், உயர் தரம் ஆகியவற்றில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்கள் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப் பட்டனர்.
அதேவேளை கடந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் பல்கலைக்கழகம் தெரிவானவர்கள் உட்பட பாட ரீதியாக அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களும் குறித்த நிகழ்வில் விசேடமாக கெளரவிக்கப்பட்டனர்
அத்துடன் கடந்த வருடம் விசேட தேவையுடைய மாணர்களுக்காக இடம்பெற்ற நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட 5 விசேட தேவையுடைய மாணவர்களும் பாடசாலை சமூகத்தினால் கெளரவிக்கப்பட்டனர்
கடந்த வருடம் க .பொ. த சாதாரண தர பரீட்சையில் 6 மாணவர்கள் 9A சித்திகளையும் உயர்தரப் பரீட்சையில் 4 மாணவர்கள் 3A சித்திகளையும் பெற்றுக் கொண்டதுடன் 26 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி க்கு மேல் பெற்று சித்தி அடைந்திருந்தனர்.
அதே நேரம் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் Q.R.கோசல்யன் சர்வதேச ரீதியாக இடம்பெற்ற ஒலிம்பியாட் கணித விஞ்ஞான போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச ரீதியில் வெண்கலப் பதக்கம் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment