நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் பிரகடனம்
களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு, குன்றுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த மாவட்டங்களில் அபாயம் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நிலையத்தின் சிரேஷ்ட சுரங்க ஆய்வாளர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் கிதுல்கல மற்றும் எட்டியாந்தோட்டை ஆகிய பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவானதாக அவர் கூறினார்.
இந்த மாவட்டங்களில் அவதான நிலைமை காணப்படும் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்தது.
நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் பிரகடனம்
Reviewed by NEWMANNAR
on
August 22, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 22, 2014
Rating:


No comments:
Post a Comment