பாகிஸ்தான் போராட்டம்; 8 பேர் பலி, 300 பேர் காயம்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவி விலகுமாறு கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற மோதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இதன் போது 26 பொலிஸார் உள்ளிட்ட சுமார் 300 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது
பாகிஸ்தான் போராட்டம்; 8 பேர் பலி, 300 பேர் காயம்
Reviewed by NEWMANNAR
on
August 31, 2014
Rating:

No comments:
Post a Comment