அண்மைய செய்திகள்

recent
-

நளினியை முருகன் சந்திப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோர் ஒரு மாத தடைக்கு பின்னர் மீண்டும் சந்தித்துள்ளனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையிலும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

 இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை 30 நிடங்கள் சந்தித்து பேசுவதற்கான அனுமதியை சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியிருந்தனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பதாக வேலூர் மத்திய சிறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது முருகனிடம் இருந்து இரண்டாயிரத்து 400 ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

 சிறைச்சாலை விதிமுறைகளை மீறும் வகையில் பணம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முருகன்- நளினி சந்திப்பிற்கு இரண்டு மாத தடை விதிக்கப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 

 எவ்வாறாயினும் முருகன் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்த தடை ஒரு மாதமாக குறைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முருகன் மற்றும் நளினி ஆகியோர் வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நேற்று சந்தித்ததாக த ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நளினியை முருகன் சந்திப்பு Reviewed by NEWMANNAR on August 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.