சீனாவில் நிலஅதிர்வு; பலியானோரின் எண்ணிக்கை 367ஆக அதிகரிப்பு
சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக உயர்வடைந்துள்ளது.
6.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நில அதிர்வில் மேலும் 1,300 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மாகாணத்திலுள்ள லூசிடான் நகரில் 12,000 வீடுகள் நில அதிர்வினால் அழிவடைந்துள்ளதுடன் தொலைத் தொடர்புகளும் கடுமையாக அனர்த்தம் ஏற்பட்ட பகுதிக்கு தற்காலிக கூடாரங்கள் , உடைகள் உள்ளிட்ட பொருட்களை சீன அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.
இதேவேளை, பாரிய மீட்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சீனாவில் நிலஅதிர்வு; பலியானோரின் எண்ணிக்கை 367ஆக அதிகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
August 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 04, 2014
Rating:


No comments:
Post a Comment