அண்மைய செய்திகள்

recent
-

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று முதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீசைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இன்று முதல் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். 

 இவ்விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நாளை 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் தினமான எதிர்வரும் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பரீட்சார்த்திகளுக்காக வகுப்புகளை ஏற்பாடு செய்தல் நடாத்துதல் செயலமர்வுகள் எதிர்பார்க்கப்படும் வினாத்தாள்கள் அச்சிடல் சுவரொட்டிகள் பிரசுரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிடல் என்பன 1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுத்தேர்வுகள் சட்டத்தின் 22ஆம் பந்தியின் கீழ் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. 

 இவ்வொழுங்கு விதியை கருத்திற் கொள்ளாது செயற்படும் யாதேனுமொருவர் பிரிவினர் அல்லது நிறுவனம் இச்சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தவராக கருதப்படுவார். எனவே இவ்வொழுங்கு விதியினை மீறுவோர் குறித்து அண்மையிலுள்ள பொலிஸ் நிலையம் பொலிஸ் தலைமையலுவலகம் அல்லது இலங்கை பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றுக்கு அறியத்தருமாறு வேண்டப்படுகின்றனர். 

 பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு பெறுபேற்றுக் கிளை 011 2784208, 011 2784537 உடனடி அழைப்பு எண் (பரீட்சை திணைக்களம்) 1911 பொலிஸ் தலைமையகம் 011 2421111 அவசர அழைப்பு 119 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று முதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை Reviewed by NEWMANNAR on August 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.