அண்மைய செய்திகள்

recent
-

உயர்தரப் பரீட்சை வினாத்தாளில் மீண்டும் சர்ச்சை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாளில் மீண்டும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை வினாத்தாள் ஒன்று லண்டன் உயர்தரப் பரீட்சை வினாத்தாளின் கேள்விகளை உள்ளடக்கியிருந்தது. 

 வர்த்தகப் பிரிவின் பொருளியல் பாட வினாத்தாளின் கேள்விகள் பல, லண்டன் உயர்தர பொருளியல் கேள்விகளுக்கு நிகரானவை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொருளியல் பாடத்தின் பகுதி பரீட்சை வினாத்தாளில் மொத்தமாக 50 வினாக்கள் காணப்படுகின்றன. அவற்றில் 21 வினாக்கள் லண்டன் உயர்தரப் பரீட்சையில் ஏற்கனவே கேட்கப்பட்டகேள்விகளாகும்.

 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் லண்டன் உயர்தரப் பரீட்சையில் கேட்கப்பட்ட வினாக்களின் தொகுப்பாக 2013ம் ஆண்டு இலங்கை உயர்தரப் பரீட்சை வினாத்தாள் அமைந்துள்ளது. 

 லண்டன் உயர்தரப் பரீட்சையின் கடந்த கால வினாக்கள், இலங்கை உயர்தரப் பரீட்சை வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டமைக்கு ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 2014ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாட வினாத்தாளிலும் குளறுபடிகள் காணப்பட்டதாக ஆசிரியர் தொழிற்சங்கமொன்று குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயர்தரப் பரீட்சை வினாத்தாளில் மீண்டும் சர்ச்சை Reviewed by NEWMANNAR on August 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.