மடு ஆவணித்திருவிழாவை முன்னிட்டுதிருத்தலத்தில் 750 பொலிஸார் பாதுகாப்புக்கடமையில்.
மடு அன்னையின் வருடாந்த ஆவணித்திருவிழா கடந்த 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆராம்பமாகியுள்ள நிலையில் எதில்வரும் 15 ஆம் திகதி திருவிழாவுடன் நிறைவடைகின்றது.
இந்த நிலையில் மடுத்திருத்தலம் மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதிகளில் பக்தர்கள் முகாமிட்டிருக்கும் நிலையில் பொலிஸார் அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மடு அன்னையின் திருவிழா கால பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ் அத்தியேட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியேட்சகர் தலமையில் சுமார் 750 பொலிஸார் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியேட்சகர் சரத்குமார ஜோசப் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.சந்திரபாலவின் வழிகாட்டலில் மேற்படி பொலிஸ் குழு கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மடுத்திருத்தலத்திற்கு வருகைதரும் பக்தர்களின் பாதுகாப்பு, மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக மடுத்திருத்தல நுழைவாயிலில் விசேட பொலிஸ் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எம்.எஸ்.எஸ்.குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
மடுத்திருத்தல சூழல் புனித பிரதேசம் என்பதினால் அங்கு களியாட்ட நிகழ்வுகள் மற்றும் மதுபான பாவனை என்பன தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிஸார் பகல் மற்றும் இரவு நேர சுற்றுக்காவல் கடமைகளில் ஈடுபடுவதோடு திருத்தல வளாகத்திலும் விசேட கடமைகளில் ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மடு ஆவணித்திருவிழாவை முன்னிட்டுதிருத்தலத்தில் 750 பொலிஸார் பாதுகாப்புக்கடமையில்.
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:


No comments:
Post a Comment