புதைக்கப்பட்ட யுவதியின் சடலம் விசாரணைகளுக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு – மகிழூர் இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட யுவதி ஒருவரின் சடலம், இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமையவே இந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த இந்த மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாக, உறவினர்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, ஐந்து மாதங்களின் பின்னர்
சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சடலம், பரிசோதனைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதைக்கப்பட்ட யுவதியின் சடலம் விசாரணைகளுக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது
Reviewed by NEWMANNAR
on
August 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 06, 2014
Rating:


No comments:
Post a Comment