மன்னார் பெரிய மடு வைத்தியசாலையில் நோயளிக்கு காலாவதியான மாத்திரைகளை கொடுத்து அச்சுறுத்திய தாதி-படங்கள்
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய மடு வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற இளைஞர் ஒருவருக்கு காலாவதியான மாத்திரைகள் வழங்கப்பட்டதோடு இது தொடர்பாக கேட்கச் சென்ற குறித்த இளைஞரை உரிய தாதி அச்சுறுத்தியுள்ளமை குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் இன்று வியாழக்கிழமை மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,,
ஈச்சலவக்கை கிராமத்தை சேர்ந்த குறித்த இளைஞன் கடந்த 5 ஆம் திகதி(5-08-2014) பெரிய மடு வைத்தியசாலைக்கு மருந்து பெற்றுக்கொள்ளுவதற்காக சென்றுள்ளார்.இதன் போது வைத்தியரின் பரிசோதனைக்கு பின் மருந்து பெற்றுக்கொள்ளுவதற்காக மருந்து கொடுக்கும் இடத்திற்குச சென்ற போது அங்குள்ள தாதி ஒருவர் மருந்தை வழங்கியுள்ளார்.
அதனை பெற்றுக்கொண்டு வீடு சென்று மருந்துகள் சிலவற்றை உட்கொண்டு விட்டு அதன் உற்பத்தி திகதியை பார்த்த போது காலாவதி ஆண்டு 2013 என காணப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக குறித்த இளைஞன் உடனடியாக குறித்த வைத்தியசாலைக்குச் சென்று உரிய தாதியரை சந்தித்து கதைத்துள்ளார்.
இதன் போது குறித்த தாதி நீர் எங்கு சென்று கூறினாலும் கூறு.அதைப்பற்றி எனக்கு தெரியாது என மிரட்டி கூறியுள்ளார்.இந்த நிலையில் குறித்த இளைஞர் மன்னார் பிரஜைகள் குழுவிற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளதோடு காலாவதியான மாத்திரைகளையும் அங்கு ஒப்படைத்துள்ளார்.
மன்னார் பெரிய மடு வைத்தியசாலையில் நோயளிக்கு காலாவதியான மாத்திரைகளை கொடுத்து அச்சுறுத்திய தாதி-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
August 07, 2014
Rating:

No comments:
Post a Comment