அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலையின் அவல நிலை-படங்கள்

மன்னார் மாவட்டச்செயலகத்திற்கு முன்பாகவுள்ள மன்னார் பழைய பொது நூலக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது சிலையின் தற்போதைய நிலை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் ஜனன தினத்தினை முன்னிட்டு அடிகளாரின் உருவச்சிலை கடந்த வருடம் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டிலும் மன்னார் நகர சபையின் அனுசரனையுடனும் மன்னார் மாவட்டச்செயலகத்திற்கு முன்பாகவுள்ள மன்னார் பழைய பொது நூலக வளாகத்தினுள் அமைக்கப்பட்டது. இச்சிலையானது அடிகளார் தமிழ் அன்னைக்கு ஆற்றிய பணியினை சமகால மக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தச்சிலை நிறுவப்பட்ட நாளில் இருந்து இன்று வரை கவனிப்பார் அற்று காக்கை, கொக்கு, குருவிகளின் எச்சத்தினால் தினந்தோறும் அபிஷேகம் செய்யப்பட்டு அசிங்கப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 


 தினந்தோறும் மன்னார் நகருக்குள் வரும் மக்கள் அனைவரினதும் பார்வையில் படக்கூடிய அமைவிடத்தில் அமைந்துள்ள அடிகளாரது இச்சிலையினை நோக்கும் போது அவரை கௌரவப்படுத்துவதக்கு அல்ல! அவமதிப்பதற்காக நிறுவப்படடது போல் இன்று வரை காட்சியளிக்கின்றது என கவலை தெரிவித்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட தரப்பினர் அவரது உருவச்சிலையினை உற்று நோக்கி பொதுமக்கள் பார்த்து மரியாதை செலுத்தும் வண்ணம் பராமரிக்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலையின் அவல நிலை-படங்கள் Reviewed by NEWMANNAR on August 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.