குற்றச் செயல்களில் ஈடுபடும் 16 வயதிற்குட்பட்டவர்களை வயதுவந்தவர்களாக கருதும் சட்டமூலத்திற்கு அங்கீகாரம்
இந்தியாவில் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் கொலைகளில் ஈடுபடும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வயதுவந்தவர்களாக கருதும் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவர்களுக்கு 3 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படுவதற்கு இந்த சட்டமூலத்தின் மூலம் அனுமதியுள்ள போதிலும் ஆயுட்தண்டனையோ மரண தண்டனையோ வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியொருவர் குழுவொன்றினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை அடுத்து சட்டங்களில் பல திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் குற்றவாளிக்கு உரிய தண்டனைகளை வழங்குவதற்கும் இவ்வாறான சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படும் என ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் சில மனித உரிமை அமைப்புகள் இந்த சட்டமூலத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.
அத்துடன் இதனை நிராகரிக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை இந்திய அரசாங்கத்தை கோரியுள்ளமையும் குறிப்பிடதக்கது
குற்றச் செயல்களில் ஈடுபடும் 16 வயதிற்குட்பட்டவர்களை வயதுவந்தவர்களாக கருதும் சட்டமூலத்திற்கு அங்கீகாரம்
Reviewed by NEWMANNAR
on
August 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 08, 2014
Rating:


No comments:
Post a Comment