கணவரை அசத்த நஸ்ரியா டிரெய்னிங்
நடிகை நஸ்ரியா திருமணத்துக்கு தயாராகிறார். வருங்கால கணவருக்காக வகைவகையான சிக்கன் உணவு சமைக்க ஸ்பெஷல் டிரெய்னிங் எடுக்கிறார். நேரம், நய்யாண்டி, ராஜாராணி படங்கள் மூலம் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்தார் நஸ்ரியா நாசிம். உடன் நடிக்கும் நடிகர்களுடன் இணைத்து காதல் கிசுகிசு வெளிவந்த வண்ணம் இருந்தது.
அத்துடன் நய்யாண்டி படத்தில் தன்னை போல் டூப்பை வைத்து கவர்ச்சி காட்சிகள் படமாக்கியதாக புகார் கூறினார். இதுபரபரப்பானது.
இந்நிலையில் திடீரென்று அவரது குடும்பத்தினர் நஸ்ரியாவுக்கு திருமண ஏற்பாடு செய்தனர். மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுக்கும் அவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து நடிப்புக்கு முழுக்குபோட்டார் நஸ்ரியா. வரும் 21ம் தேதி இவர்கள் திருமணம் கேரளாவில் நடக்க உள்ளது.
திருமணத்துக்கான அழைப்பிதழ்களை தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் நஸ்ரியா அளித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு கணவர் பஹத் பாசிலை சாப்பாட்டு விஷயத்தில் அசத்துவதற்காக சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.
ஏற்கனவே தனது தாயாருடன் சிறுவயது முதலே சமையல் பழகி இருக்கிறார் நஸ்ரியா. தற்போது அவர் கற்பது கொஞ்சம் ஸ்பெஷல். ருசியான பட்டர் சிக்கன், சிக்கன் ஸ்டிவ், கீ ரைஸ் மற்றும் பிரியாணி வகைகளை சமைக்க அவர் பயிற்சி எடுத்து முடித்திருக்கிறார்.மேலும் திருமணத்துக்கு தேவையான உடைகள், நகைகள் வாங்குவதிலும் பிஸியாக இருக்கும் நஸ்ரியா சமீபத்தில் துபாய் சென்று மேக் அப் சாதனங்களை பை நிறைய அள்ளி வந்திருக்கிறார்.
கணவரை அசத்த நஸ்ரியா டிரெய்னிங்
Reviewed by NEWMANNAR
on
August 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 08, 2014
Rating:


No comments:
Post a Comment