அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை நாளை ஆரம்பம்

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறாவது அமர்வு நாளை மன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் இந்த அமர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளையும் நாளை மறுதினமும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. 


ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலும், 11ஆம் திகதி மடு பிரதேச செயலாளர் பிரிவிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. 

 ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரையில் 19 ஆயிரத்து 284 காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகள் கிடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை நாளை ஆரம்பம் Reviewed by NEWMANNAR on August 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.