மன்/சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் அதிபர் யாழ் இந்துக்கல்லூரியின் பதில் அதிபராக பொறுப்பேற்றார்
கடந்த 22.08.2014 யாழ் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக ஐயம்பிள்ளை தயானந்தராஜா ( B.Com Hons, PGDE, PGDEM, MEd) அவர்கள் கடைமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்லூரி நிர்வாகம் தொடர்பான சகல பொறுப்புக்களையும் யாழ் இந்துவின் முன்னாள் அதிபர் திரு.வீ.கணேசராசா தற்போது பதில் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் திரு. ஐ.தயானந்தராஜா அவர்களிடம் கையளித்தார்.
இதற்கு முன்னர் திரு. ஐ.தயானந்தராஜா அவர்கள் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் (தேசிய பாடசாலை) அதிபராக கடைமையாற்றியவர் என்பதும் இவர் யாழ் இந்துவின் பழைய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்/சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் அதிபர் யாழ் இந்துக்கல்லூரியின் பதில் அதிபராக பொறுப்பேற்றார்
Reviewed by NEWMANNAR
on
August 29, 2014
Rating:

No comments:
Post a Comment