அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் பிரதி நிதிகளுக்கும்,மன்னார் மாவட்ட கூட்டுறவுச்சங்க பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு-Photo

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் பிரதி நிதிகளுக்கும்,மன்னார் மாவட்ட மீன்பிடி,கால்நடை,பனை,தென்னை கூட்டுறவுச்சங்கங்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(29) காலை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தில் அதன் தலைவர் என்.எம்.ஆலம் தலைமையில் இடம் பெற்றது. 

இதன் போது வடமாகாண சபை உறுப்பினரும்,வடமாகாண கூட்டுறவு அமைச்சின் விசேட பிரதிநிதியுமான சட்டத்தரணி எஸ்.சயந்தன்,வடமாகாண கூட்டுறவுத்திணைக்கள பிரதம அலுவலகர் உதயன்,மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் மங்கள தாசன் மற்றும் மாவட்டத்தின் மீனவ சங்கம்,கால்நடை வளர்ப்போர் சங்கம் மற்றும் பனை தென்னை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.  

தற்போது மன்னார் மாவட்டத்தில் கூட்டுறவில் ஏற்பட்டுள்ள பிரச்சிகைள் தொடர்பாகவும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தொடர்சசியாக எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் வடமாகாண கூட்டுறவு அமைச்சின் பிரதி நிதிகளுக்கு தெழிவு படுத்தப்பட்டது.

 இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்களினால் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,மீனவர்களின் காப்புறுதியில் உள்ள சிக்கல்கள்,மீனவர்களுக்கு வழங்கப்படும் பாதிப்பு நிவாரணங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் வருகை தந்த பிரதி நிதிகளுக்கு மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சாமசத்தலைவர் என்.எம்.ஆலம் தெழிவு படுத்தியமை குறிப்பிடத்தக்கது.








வடமாகாண கூட்டுறவு அமைச்சின் பிரதி நிதிகளுக்கும்,மன்னார் மாவட்ட கூட்டுறவுச்சங்க பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு-Photo Reviewed by NEWMANNAR on August 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.