நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட நீர்த் தாங்கி இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் விசாரணை
யாழ் நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர்த் தாங்கி ஒன்று இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
சுமார் 150 அடி உயரத்தில் அமைக்கப்படும் இந்த நீர்தாங்கியானது நிர்மாண வேலைகளின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக இடிந்து வீழ்ந்திருக்கலாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிடுகின்றார்.
கடல் நீரை நன்னீராக்கி மக்களுக்கு நீர் விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் இரண்டு நீர்த்தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றுள் 70 வீத நிர்மாணப் பணிகள் நிறைவடைந்திருந்த நீர்த்தாங்கியொன்றே நேற்று மாலை இடிந்து வீழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த விடயம் தொடர்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினருக்கு அறிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை ஸ்ரீ நியூஸ்பெஸ்டுக்கு குறிப்பிடுகின்றார்.
நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட நீர்த் தாங்கி இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் விசாரணை
Reviewed by NEWMANNAR
on
August 28, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 28, 2014
Rating:


No comments:
Post a Comment