அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் புதிதாக திறக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு அன்று முதல் இன்று வரை மூடப்பட்ட நிலையில்-மக்கள் விசனம்.-Photo

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளைக்காரியாலயம் ஒன்று ஒரு மாதத்திற்கு முன் மன்னார் பிரதேசச் செயலக பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

எனினும் குறித்த அலுவலகம் திறக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை மூடப்பட்ட நிலையில் உள்ளதாக மன்னார் மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இடம் பெற்ற அசாதாரண சூழ்நிலையின் போது மன்னாரில் சிறப்பான முறையில் மனித உரிமை ஆணைக்குழு செயற்பட்டு வந்தது.

பின் மன்னாரில் இயங்கி வந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் மூடப்பட்டு மன்னாருக்கான செயற்பாடுகள் அனைத்தும் வவுனியா அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போன கடத்தப்பட்ட மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான முறைப்பாடுகளை வவுனியா அலுவலகத்திற்குச் சென்றே முறையிட்டு வந்தனர்.
இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மன்னாரில் மனித உரிமைகள் இல்லம் மன்னாரில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்து வந்த நிலையில் அவ் இல்லம் திடீர் என மன்னாரில் மூடப்பட்டது.

எனினும் பல வருடங்களாக மன்னாரில் இயங்கி வந்த மன்னார் பிரஜைகள் குழு அன்று முதல் இன்று வரை தனது மனித நேயப்பணிகளை மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றது.

எனினும் மன்னாரில் கடந்த மாதம் திறக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு அன்றைய தினம் முதல் மூடப்பட்டு உள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நாளாந்தம் முறைப்பாடுகளை பதிவு செய்யச் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும்,சில நேரங்களில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.













மன்னாரில் புதிதாக திறக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு அன்று முதல் இன்று வரை மூடப்பட்ட நிலையில்-மக்கள் விசனம்.-Photo Reviewed by NEWMANNAR on August 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.