8 மாதங்களின் பின் வடக்கில் கன மழை
சுமார் 8 மாதங்களின் பின்னர் வட மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை மாலை கடும் மழை பெய்துள்ளது. வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களிலேயே சனிக்கிழமை மாலை முதல் கடும் மழை பெய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டில் அதிக மழை நாளாக சனிக்கிழமை (16) பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணதத்தில் மாத்திரம் சனிக்கிழமை இரவு 46.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
எனினும் இந்த மழைவீழ்ச்சி, வடக்கில் நிலவி வந்த கடும் வரட்சியான காலநிலைக்கு போதுமானதாக இல்லை என வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்தது.
கடந்த வருடம் (2013) டிசெம்பர் மாதத்தில் வன்னி மாவட்டத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து நேற்றே (16) மீண்டும் மழை பெய்துள்ளது. இந்த இடைப்பட்ட காலப்பகுதியில், வட மாகாணம் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது.
வன்னி மாவட்டத்தில் மாத்திரம் உள்ள குளங்களில் 80 வீதமான குளங்கள் வற்றி வரண்டுப் போயிருந்தன. கிணறுகளும் வற்றிக்கிடந்தன. இதனால், பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
8 மாதங்களின் பின் வடக்கில் கன மழை
Reviewed by NEWMANNAR
on
August 17, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment