அண்மைய செய்திகள்

recent
-

ஐந்து நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு

கல்கமுவ பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த சிலரால் கடத்தப்பட்டிருந்த நான்கு வயது பிள்ளை நேற்றிரவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 கல்கமுவ பகுதியில், குற்றப் புலனாய்வுத் பிரிவினரால் பிள்ளை பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

 இந்த பிள்ளையை பாதுகாப்பாக மீட்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஊடகங்கள் மற்றும் ஏனையோருக்கு பொலிஸ் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். 

 யசேன் லங்காநாத் குமார ஏக்கநாயக்க என்ற பிள்ளை ஐந்து நாட்களுக்கு முன்னர், முகமூடி அணிந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரால் கடத்தப்பட்டிருந்தது.
ஐந்து நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு Reviewed by NEWMANNAR on August 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.