நல்லூர்க்கந்தன் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம்
வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. காலை 10.00 மணிக்கு கொடியேற்ற உற்சவம் நிகழும்.
மகோற்சவத்தின் பத்தாவது நாளான இம்மாதம் 10ம் திகதி மாலை மஞ்சம் உற்சவம் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு உற்சவங்களாக 16ம் திகதி மாலை அருணகிரிநாதர் உற்சவமும், 17ம் திகதி மாலை கார்த்திகைத் திருவிழாவும்.
20ம் திகதி காலை சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை கைலாச வாகன உற்சவமும், 21ம் திகதி காலை கஜவல்லி முஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை வேல் விமான உற்சவமும்.
22ம் திகதி காலை மாம்பழத் திருவிழா எனப்படும் தண்டாயுதபாணி உற்சவமும், அதே தினம் மாலை ஒருமுகத் திருவிழாவும், 23ம் திகதி மாலை சப்பரத் திருவிழாவும் இடம்பெறவிருக்கின்றன.
மகோற்சவத்தின் இருபத்திநான்காவது நாளான இம்மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு இரதோற்சவமும்,
இருபத்தைந்தாவது நாளான 25ம் திகதி காலை 7.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் நடைபெறவிருக்கின்றன.
தொடர்ந்து மறுநாள் 26ம் திகதி மாலை நிகழும் பூங்காவனத் திருவிழாவுடன் இவ்வருட மகோற்சவம் நிறைவு பெறுகிறது.
மகோற்சவ காலத்தில் தினமும் மாலை 5.00 மணிக்கு முருகப் பெருமான் வெளிவீதியுலா இடம்பெறும்.
நல்லூர்க்கந்தன் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
August 01, 2014
Rating:

No comments:
Post a Comment