அண்மைய செய்திகள்

recent
-

அதிகம் கோபப்படுபவரா நீங்கள்? கவனம் கல்லீரல் பாதிக்கப்படும்.

கல்லீரல் மனித உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான சக்தியை பெற உதவும். தேவையான சக்தியை பெற உதவும். அது தன் வேலையை செய்தால்தான் மற்ற உறுப்புகள் சீராக இயங்கும். ரத்தத்தை சேமித்து வைத்து உடல் உழைப்பின் போது தேவையான பகுதிகளுக்கு அனுப்பி தசைகளுக்கும், தசை நார்களுக்கும் ஊட்டமளிக்கிறது.

 கல்லீரலின் சக்தி பாதிக்கப்பட்டால் தசை நாண்கள் சுருங்கி விரிதல், நீட்டி மடக்குதலில் தொய்வு ஏற்பட்டு உடலின் எலும்பு கூட்டமைப்பில் வலி மற்றும் நோய்கள் ஏற்படுகிறது. கண்பார்வை கோளாறுகள், சரும பாதிப்புகள், விரல் நகங்களில் கோளாறுகளுக்கு காரணம் கல்லீரலின் குறைபாடுகளே! மன இறுக்கம், அதிக கோபம், அதிக உடல் உழைப்பு, மது அருந்துதல், போதை பொருட்கள், போதிய உறக்கமின்மை, கொழுப்பு உணவுகள் கல்லீரலை பாதிக்கிறது.

இதனால் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், முரட்டுதனம், கடுஞ்சொற்கள், ஒற்றை தலைவலி, இருதய நோய்கள், மஞ்சள் காமாலை, கிறுகிறுப்பு, வயிற்று வலி, புளித்த ஏப்பம், ஒழுங்கற்ற மாதவிடாய், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. மோசமான உணவு முறை மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆல்கஹாலை அதிகமாக குடித்தல், தொப்பை போன்ற விஷயங்களும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வர காரணமாக உள்ளன. இந்த பிரச்சனைக்கான காரணம் உணவு முறையை ஒட்டியே தொடங்குவதால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் தொடங்குவது நல்லது.
அதிகம் கோபப்படுபவரா நீங்கள்? கவனம் கல்லீரல் பாதிக்கப்படும். Reviewed by NEWMANNAR on August 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.