அண்மைய செய்திகள்

recent
-

மின்னலின் நடுவே நிச்சயதார்த்தம்-படங்கள்

கனடா நாட்டை சேர்ந்த காதலர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மின்னலை மிக அழகாக போட்டோகிராபர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த போட்டோ உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது. கனடாவின் அல்பெர்ட்டா பகுதியை சேர்ந்த Kassandra மற்றும் Craig என்ற காதல் ஜோடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு மழை நாளில் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் புரிந்தனர்.

 அவர்கள் முதன்முதலாக பார்த்துக்கொண்டபோது பயங்கர மின்னல் ஒன்று தோன்றியதாம். இந்நிலையில் அவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று ஒரு புல்வெளிப்பகுதியில் நடந்தபோதும் மின்னல் அடித்தது. இதை தற்செயலாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போட்டோகிராபர் புகைபப்டம் எடுத்துள்ளார். 

 மின்னலின் பின்னணியில் இந்த தம்பதிகள் நிற்பது போல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்படம் கனடாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியுள்ளது. சமூக வலைத்தளங்களில் மில்லியன்கணக்கில் இந்த போட்டோ ஷேர் செய்யப்பட்டு இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களும் குவிகிறது.




மின்னலின் நடுவே நிச்சயதார்த்தம்-படங்கள் Reviewed by NEWMANNAR on August 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.