அண்மைய செய்திகள்

recent
-

ருசிக்க ருசிக்க விருந்தளித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனக்கு கடிதம் எழுதியவர்களை நினைவில் வைத்து அவர்களுக்கு விருந்தளித்துள்ளார். ஒபாமாவிற்கு தபால் மூலமும், மின்னஞ்சல் வழியாகவும் தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருவது வழக்கமாகும். இவற்றில் ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு கோரிக்கையுடனும், நன்றி தெரிவிப்புடனும், குறைகளை சுட்டிக்காட்டும் வகைகளில் இருக்கும். 

 இவருக்கு வரும் கடிதங்களை படித்து, அவற்றிக்கு பதில் தருவதற்காக வெள்ளை மாளிகையில் தனி பிரிவே உள்ளது. 

 தினமும் வரும் கடிதங்களில் 10 கடிதங்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு ஒபாமா படிப்பதற்கு அனுப்பப்படும். இந்நிலையில் தனக்கு கடிதம் எழுதியவர்களை மறக்காத வகையில் ஒபாமா கன்சாஸ் நகருக்கு சென்ற அவர், அங்கு தனக்கு கடிதம் எழுதிய 4 பேருடன் இரவு உணவு சாப்பிட்டுள்ளார். ஹொட்டலில் அவர்களுடன் நட்புடன் பேசி மகிழ்ந்த ஒபாமா, அவர்களுக்காக உணவை தானே வாங்கிக் கொடுத்துள்ளார்.




ருசிக்க ருசிக்க விருந்தளித்த ஒபாமா Reviewed by NEWMANNAR on August 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.