அண்மைய செய்திகள்

recent
-

வௌ்ளைக் கொடிகளுடன் இலங்கை கடற்பரப்பை நோக்கி பயணிக்க 5000 மீனவக் குடும்பங்கள் தயார்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் வெள்ளைக் கொடியுடன் கச்சத்தீவு நோக்கி பயணமாவதற்கு ஆயத்தமாகியுள்ளனர். சுமார் ஐயாயிரம் மீனவ குடும்பங்கள் ராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் காலை கச்சத்தீவில் தஞ்சமடைவதற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழக விசைப்படகு நலன்புரி சங்கம் மற்றும் இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை குழு தலைவர் என். தேவதாசன் கூறினார். 

 கடந்த 24 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டத்தில் தமிழகத்தின் கரையோர பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்காக மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பாம்பன் பகுதி மீனவர்களும் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். தமிழக மீனவர்களின் வருகை குறித்து கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி டி.எம்.ஆர். திசாநாயக்கவிடம் வினவியபோது, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட சந்தர்ப்பங்களில் இந்த நாட்டு சட்டத்தின் பிரகாரம் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளின் பிரகாரம் அவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயினும், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் சில மாநிலங்களிலும் இலங்கை மீனவர்களும், அவர்களின் படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், அந்த நாட்டு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், அவர்களின் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கூறினார். 

 இந்த விடயம் தொடர்பில் இலங்கை மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசாங்கத்தினால் அழுத்தங்கள் விடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், மீனவர் பிரச்சினையைவிட தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையின் கீ்ழ் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் இலங்கையின் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கின்ற பட்சத்தில், அரச பாதுகாப்பு விடயத்திற்கு உட்பட்ட ஒரு விடயமாகக் கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
வௌ்ளைக் கொடிகளுடன் இலங்கை கடற்பரப்பை நோக்கி பயணிக்க 5000 மீனவக் குடும்பங்கள் தயார் Reviewed by NEWMANNAR on August 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.