பழம்பெரும் சினிமாவுக்கு மாறிய லாரன்ஸ்
முதுகு தண்டில் காயம்பட்டு 5 மாத ஓய்வில் இருந்த லாரன்ஸ் ஒரே படத்தில் 2 கதை கொண்ட புது ஸ்கிரிப்ட் தயார் செய்தார்.இது பற்றி லாரன்ஸ் கூறியதாவது:‘கங்கா படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது. கிளைமாக்ஸ் மட்டும் பாக்கி உள்ளது. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. கங்கா பட ஷூட்டிங்கின்போது எனக்கு முதுகு தண்டில் அடிபட்டதால் கடந்த 5 மாதம் டாக்டர்கள் மேற்பார்வையில் ஓய்வில் இருந்தேன்.
அப்போது ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா என்று புது ஸ்கிரிப்ட் தயாரித்தேன். ஒரே படத்தில் இடைவேளைவரை ஒரு கதையும் அதன்பிறகு மற்றொரு கதையும் இடம்பெறும்.
முதல் கதைக்கு ‘கிழவன் என டைட்டில வைத்திருக்கிறேன். ஆண்டிரியா ஹீரோயின். 2வது கதையின் தலைப்பு ‘கருப்பு துரை. இதில் லட்சுமிராய் ஹீரோயின். இரண்டிலும் நானே ஹீரோவாக நடிப்பதுடன் இயக்குனர் பொறுப்பும் ஏற்கிறேன். இதுவரை பாடல் எழுதி வந்த விவேகா இப்படங்களுக்கு பாடலுடன் வசனமும் எழுதுகிறார்.
ஒரு கதைக்கு லியோன் இசை. மற்றொரு கதைக்கு புது இசை அமைப்பாளர் இசை. இவ்வாறு லாரன்ஸ் கூறினார். ஆரம்ப கால தமிழ் சினிமாவில் இதுபோல் ஒரே டிக்கெட்டில் 2, 3 படங்கள் பார்க்கும் பாணி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் சினிமாவுக்கு மாறிய லாரன்ஸ்
Reviewed by NEWMANNAR
on
September 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 06, 2014
Rating:


No comments:
Post a Comment