அண்மைய செய்திகள்

recent
-

பிரபல நகைச்சுவை நடிகை மரணம்

கடந்த வாரம் மாரடைப்புக்குள்ளான அவர் நியூயோர்க்கிலுள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் இருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார். 

 அவரது மரணம் குறித்து அவரது ஒரே மகளான மெலிஸ்ஸா விபரிக்கையில் எனது தாயார் மக்களை சிரிக்க வைப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். தற்போது சிரிப்பது சிரமமாகவுள்ளபோதும் அவரின் விருப்பின் பிரகாரம் நாம் விரைவில் சிரிப்புக்கு திரும்புவோம் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

 ஜோன் நிவர்ஸூம் மெலிஸாவும் இணைந்து ஜோன் மெலிஸா தொலைக்காட்சி நிகழ்ச்சித்தொடரில் ஒன்றாக பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. ரஷ்ய புரட்சியின் போது நாட்டை விட்டு வெளியேறிய யூத குடும்பத்தைச் சேர்ந்த ஜோன் நிவர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நகைச்சுவை நடிகை மரணம் Reviewed by NEWMANNAR on September 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.