மன்னாரில் 'சஹன அருண' கடன் திட்டம் ஆரம்பித்து வைப்பு-Photo
திவிநெகும திட்டத்தின் கீழ் 'சஹன அருண' கடன் வழங்கும் திட்டம் இன்று(1)இலங்கை முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த திட்டம் மன்னார் மத்தி சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஜே.சுசந்தி தலைமையில் மன்னாரில் இடம் பெற்றது.
குறித்த திட்டத்தினை அமைச்சர் றிஸாட் பதியூதின் இன்று(1) திங்கட்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
மன்னார் மத்தி சமூர்த்தி வங்கிச் சங்கத்தில் காலை 11.30 மணியளவில் குறித்த கடன் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் பயணாளிகள் 24 பேரூக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் தொகையாக வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அமைச்சர் றிஸாட் பதியூதினுடன் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,திவிநெகும திட்டத்தின் வலயம் 6 பணிப்பாளர் திருமதி சாறோஜினி பத்மரஞ்சன்,திவிநெகும திட்டத்தின் மன்னார் உதவி ஆணையாளர் கே.சசிதரன்,மன்னார் பிரதேசச் செயலாளர் கே.வசந்தகுமார்,அமைச்சரின் இணைப்பாளர் என்.எம்.முனவ்பர்,மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் உற்பட பயணாளிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 'சஹன அருண' கடன் திட்டம் ஆரம்பித்து வைப்பு-Photo
Reviewed by NEWMANNAR
on
September 01, 2014
Rating:
No comments:
Post a Comment