அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மூர்வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி-மூவர் கைது-Photo

மன்னார் மூர்வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து பொருட்களை சூறையாட முற்பட்ட 3 இளைஞர்களை மூர்வீதி கிராம இளைஞர்கள் பிடித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று(11) வியாழக்கிழமை  அதிகாலை  இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,,

மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து இன்று(11) வியாழக்கிழமை அதிகாலை  5 இளைஞர்கள் ஒன்றிணைந்து பொருட்களை சூறையாட முயற்சித்துள்ளனர்.

 குறித்த வர்த்தக நிலையத்தின் கதவிற்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்த குறித்த இளைஞர்கள் கடையினுள் சென்று முன் பகுதியில் உள்ள குளிர் சாதனப்பெட்டியை திறந்து அதில் இருந்த ஐஸ்கிறிமை எடுத்து சாப்பிட்டுள்ளனர்.

பின் தமது திருட்டு நடவடிக்கையை ஆரம்பித்த  போது குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரது  மகனும்,அவருடைய இரு நண்பர்களும் பிறிதொரு இடத்தில் இருந்து தமது கடைப்பகுதியை நோக்கி வந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் கடைக்கு முன்  நிற்பதை கண்டு அருகில் சென்றுள்ளனர்.

இதன் போது திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த ஐவரும் தாம் வைத்திருந்த கூறிய ஆயுதங்களினால் இவர்கள் மீது கடுமையாகத்தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் போது குறித்த மூவரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் வழங்கிய நிலையில் மூர்வீதி கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன் போது அருகில் இருந்த விடுதி ஒன்றில் இருந்து திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர் பிடிபட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் மாட்டிக்கொண்டனர்.

எனினும் இருவர் தப்பிச் சென்றனர்.விசாரணைகளை மேற்கொண்ட மூர்வீதி கிராம இளைஞர்கள் குறித்த மூவரையும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த மூவரும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்களும் மட்டக்களப்பு ஏறவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





மன்னார் மூர்வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி-மூவர் கைது-Photo Reviewed by NEWMANNAR on September 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.