வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சர்கள் குழு மன்னார் விஜயம்-Photo
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இன்று(30) செவ்வாய்க்கிழமை காலை யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சலவக்கை மற்றும் சன்னார் ஆகிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண விவசாய அமைச்சர் பா.ஐங்கர நேசன்,வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம்,வடமாகாண கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கல நாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் சென்றிருந்தனர்.
முதலில் ஈச்சலவக்கை கிராமத்திற்குச் சென்ற குறித்த குழுவினர் அங்கிராம மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டனர்.
குறிப்பாக ஈச்சலவக்கை கிராமத்தில் உள்ள பாடசாலையில் காணப்படுகின்ற பிரச்சினைகள்,போக்குவரத்துச் சேவைகள் சீரின்மை,குடிநீர் பிரச்சினைகள்,வீதி சீரின்மை,மின்சார வசதியின்மை,ஆரம்ப வைத்திய சேவைகள் இல்லாமை,அக்கிராமத்தில் உள்ள குளம் புனரமைப்புச் செய்யப்படாமை,வயல் நிலங்கள் துப்பரவு செய்யப்படாமை,நன்னீர் மீன்பிடியில் உள்ள பிரச்சினைகள்,புதிதாக வழங்கப்பட்ட காணிகளுக்கு பாதைகள் இல்லாமை,மக்களின் காணிகளையும் வயல் நிலங்களையும் இராணுவம் கைப்பற்றியுள்ளமை உட்பட ஈச்சலவக்கை கிராம மக்கள் எதிர் நேக்கும் சகல பிரச்சினைகளும் முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு அந்த மக்கள் தெரியப்படுத்தினர்.
-இதே வேளை ஈச்சலவக்கை பகுதியில் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் சுவீகரித்து இராணுவ பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அக்கிராம மக்கள் குறித்த குழுவினருக்கு தெரியப்படுத்தினர்.
இந்த நிலையில் குறித்த பிரச்சினைகளை கேட்டறிந்த குறித்த குழுவினர் மக்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த மக்கள் சன்னார் கிராமத்திற்குச் சென்று அக்கிராம மக்களை சந்தித்து மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டனர்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சர்கள் குழு மன்னார் விஜயம்-Photo
Reviewed by NEWMANNAR
on
September 30, 2014
Rating:

No comments:
Post a Comment