சிறுநீரக நோயாளர்களை அதிகமாகக் கொண்ட மாவட்டங்களில் வவுனியாவிற்கு இரண்டாம் இடம்
இலங்கையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் இரண்டாவது இடத்தில் வவுனியா மாவட்டம் காணப்படுவதாக வட மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினையே நிறுநீரக நோய் ஏற்படுவதற்கான பிரதான காரணம் என மாகாண சுகாதார அமைச்சர் டொக்டர். பா.சத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குருதி சுத்திகரிப்புக்காக வட பகுதியிலிருந்து தென் பகுதிக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோயாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு வவுனியா பொது வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவின் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் மாகாண சுகாதார அமைச்சர் டொக்டர் பா.சத்தியலிங்கம் தெரிவிக்கின்றார்.
சிறுநீரக நோயாளர்களை அதிகமாகக் கொண்ட மாவட்டங்களில் வவுனியாவிற்கு இரண்டாம் இடம்
Reviewed by NEWMANNAR
on
September 02, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 02, 2014
Rating:


No comments:
Post a Comment