அண்மைய செய்திகள்

recent
-

வாக்காளர் இடாப்பில் இடம்பெறாதவர்கள் இன்று முதல் உரிமை கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும்

2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இடம்பெறுவதற்கு தகைமை பெற்றிருந்த போதிலும், அதற்காக பரிந்துரைக்கப்படாதவர்கள் இன்று முதல் உரிமை கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. 

 இதற்கான பட்டியல் இன்று முதல் அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறுகின்றார். 

 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிக்கின்றார்.
வாக்காளர் இடாப்பில் இடம்பெறாதவர்கள் இன்று முதல் உரிமை கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும் Reviewed by NEWMANNAR on September 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.